|
"எமது நோக்கு" கோனாபீனுவல பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு மிகச்சிறந்த மற்றும் வினைத்திறனான சேவையை வழங்குதல். |
"எமது செயற்பணி" அரச கொள்கைகளுக்கேற்ப சேவையை வழங்குதல்,வள ஒருங்கிணைப்புடனும் மக்கள் பங்களிப்புடனும் கூடிய வினைத்திறனான, நிலையான மற்றும் திட்டமிடப்பட்ட அபிவிருத்திச் செயல்முறை ஒன்றின் மூலம் பிரதேச மக்களின் வாழ்க்கையை உயர்துதல். |
நிறுவனத்தின் அமைவிடம்
தென் மாகாண காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள, அக்காலகட்டத்தில் அம்பலாங்பொடை பிரதேச செயலகப் பிரிவுக்கு உரித்தாகவிருந்த 19 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை ஒதுக்கிக்கொண்டதன் பின்னர் புதிய நிர்வாக அலகொன்றாக 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி கோனாபீனுவல சரண சந்திக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டாலும் பின்னர் புதிய இரண்டு மாடிக் கட்டடங்கள் இரண்டைக் கொண்ட கோனாபீனுவல பிரதேச செயலக வளாகமானது , காலி-கொழும்பு A² பாதையின் குமாரகந்த சந்தியில் காலி எல்பிட்டி 752 பாதையின் 6.2KM தூரத்திலும் ஹிக்கடுவை சந்தியில் காலி பத்தேகம 395 பாதையில் 5.2KM தூரத்திலும் அமைந்திருப்பதோடு, வடக்கில் அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தையும் கிழக்கில் பத்தேகம பிரதேச செயலகத்தையும் தெற்கில் ஹிக்கடுவை பிரதேச செயலகத்தையும் வெலிவிட்டிய திவித்துர பிரதேச செயலகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

பாதை விபரங்கள் கூகுள் வரைபடத்தின் மூலம்
கிராமிய மற்றும் குதியளவிலான நகர் மற்றும் தன்னிறைப்பொருளாதார முறைக்கு உரிமைக் கோரும் கோனாபீனுவல பிரதேச செயலக அதிகார எல்லையானது பெருன்பான்மையாக சிங்கள பௌத்த மக்களைக் கொண்டிருப்பதோடு ,
கோனாபீனுவல என்ற பெயர் தொடர்பான பல புராணக்கதைகள் காணப்படுகின்றன. ஒரு வேட்டைக்காரனால் துரத்தப்பட்ட வந்த எருது ஒன்று உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அருகில் இருந்த கால்வாயில் பாய்ந்து நீந்திச் சென்றமையால் கோனா –பீனு-எள என்றவாறு பயன்பாட்டிற்கு பின்னர் வந்த்தன் கோனாபீனுவல என மாற்றமடைந்த்ததாக புராணக்கதைகள் சான்றுபகர்கின்றன.
2337 ஹெக்டெயார் நிலப்பரப்பினைக் கொண்ட கோனாபீனுவல பிரதேச செயலக அதிகார எல்லையானது கறுவா, மிளகு, போன்ற ஏற்றுமதிப் பயிர்களாலும் வயல், வீட்டுத்தோட்டம் மற்றும் கால்நடை வளங்கலாலும், சதுப்புநிலத்தாவரம்,போன்ற இயற்கையான பாதுகாக்கப்பட்ட வனங்களினாலும் நிறைந்த ஓரளவு சுற்றுலா ஈர்ப்புடன் கூடிய அழகான நிலப் பகுதியாகும்.
நிறுவனத்தின் பரிணாமம்
|
பெயர் |
இருந்து |
வரை |
|
திரு யு.ஜி.விதுர காரியவசம்(ப.க) |
2005-12-05 |
2006-01-22 |
|
திருமதி எல்.பி.மாலனி(ப.க) |
2006-01-23 |
2006-05-21 |
|
திரு ஜே. வன்னிஆரச்சி |
2006-05-22 |
2007-07-08 |
|
திரு நிமல்குணவர்தன |
2007-07-09 |
2013-08-27 |
|
திருமதி தமயந்தி பரணகம(ப.க) |
2013-09-25 |
2014-01-12 |
|
திருமதி பிரியந்தா திசாநாயக்க |
2014-01-13 |
2017.03.24 |
|
திருமதி ஐ.ஹிமாலி ரத்னவீர (ப.க) |
2017.03.28 |
2017.07.05 |
|
திருமதி எல்.என்.பியுமலீ லியனகே |
2017.07.06 |
2023.03.30 |
|
மிஸ் ஜி.ஜி. லட்சுமி காந்தி (ப.க) |
2023.04.03 | 2023.08.27 |
|
திரு. எம்.எம்.எம். ஷர்பாஸ் |
2023.08.26 |
















